Sunday, March 5, 2017

2.0 ஆலய அமைப்பு

ஒரு நாட்டின் நாகரிகச் சின்னமாக விளங்கக் கூடியது கட்டடக் கலை, ‘எதனையும் திட்டமிட்டுச் செயற்படுத்துவதே நல்லது’ என்ற நடைமுறைக்கேற்பக் கட்டடக் கலையின் நுட்பங்கள் ஆராயப்படுகின்றன.
‘கட்டடக் கலை நுட்பங்கள்’ எனப் பொதுவாகத் தலைப்பு அமைந்திருப்பினும், இப்பாடத்தில் ஆலயக் கட்டடக் கலையைப் பற்றியே பெரிதும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நெடுங்காலம் சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியது ஆலயம்; எனவே, அதற்கேற்ப ஆலயம் கட்டுமிடத்தைத் தக்கவாறு நிலத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல் நல்லது.

ஆலயத்திற்கேற்ற அடிப்படை அங்கங்களாகச் சுவர், பிராகாரம், மண்டபங்கள், கூரை முதலியவற்றை எப்படி அமைக்க வேண்டுமென்று முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.

ஆலயம் புராண நோக்கிலும் தத்தவ அடிப்படையிலும் சமுதாயத்தின் தேவை என்பதை உணர்ந்து, கோபுரம் முதலியவற்றைச் சிறப்புற அமைக்கலாம் ; கோபுரம் தெய்வநலச் சின்னமென்பதும், அதனை வணங்குவது தூலலிங்க வழிபாடாக அமையும் என்பதும் தெளிவாக்கப்படுகின்றன.

பொறியியல் நுட்பத்தையும், அறிவியல் நுட்பத்யைும் கட்டடக் கலையில் இணைத்துத் தமிழர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதும் கேரளாந்தகன் வாயிலாகக் கூறப்படுகின்றது.

(தொடரும்...)

No comments:

Post a Comment

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...