Friday, March 31, 2017

03. சூதமாமுனிவர்


03. சூதமாமுனிவர்
பெருமாள் திருமாலின் உந்தியில் பிரம்மதேவன் தோன்றி இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார். தவம் புரிவதற்குச் சிறந்த இடமாக ஆரணியங்களுலெல்லாம் அரசாக விளங்குவது நைமிசாரணியம்.

புராணங்களைச் சொல்வதில் வல்லவரான சூதமாமுனிவர் அங்கு வந்து கொண்டிருந்தார். வேத வேதாங்கங்களை ஐயந்திரிபற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ-ஹரிகதா சங்கீர்த்தன சீலர்க்களுமான கவுனகர் முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள்.

சௌனகாதிமுனிவர்கள் எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து உயர்ததொரு ஆசனத்தில் அமரச் செய்து பூஜித்து வணங்கினார்கள்.   அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகளுக்கு அஞ்சலி செய்து,

“சூதமாமுனிவரே! தங்களிடமிருந்து பல புராணங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ஆகவே விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம். தாங்களோ பகவானின் அம்சமாக விளங்கும் வேதா வியாச முனிவரின் சீடர். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. தர்மார்த்த கர்ம மோட்சம் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப்புருசார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீகமான புராணம் ஒன்றை தேவரீர் கருணை கூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று பணிவோடு கேட்டார்கள்.
             
அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கி சூதமாமுனிவர் தம் குருநாதரான வியாச மகரிஷியின் திருவடித் தாமரைகளைத் தமது இருதயத்தில் தியானித்து, பிறகு சிரசின்மேல் தம்மிரு கரங்களையும் குவித்து, சர்வஜெகத்காரணனும், ரட்சகனுமான ஸ்ரீமத் நாராயணனைத் தொழுது வணங்கி பூஜித்து விட்டு, சௌனகாதி முனிவர்களை நோக்கி, “அருந்தவ முனிவர்களே! நீங்கள் நல்லதொரு கேள்வியை கேட்டீர்கள். தேவதேவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழில்களை செய்பவனும், புருசோத்தமனுமான  ஸ்ரீமத் நாராயணனை, முன்பு ஒரு சமயம் பட்சிராஜனான ஸ்ரீ கருடாழ்வான்  பணிந்து, இப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போன்றதொரு கேள்வியை உலக நன்மையின் பொருட்டுக் கேட்டான். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் தக்க விடையளித்தார். அந்தக் கதையை திருமால் கருடனுக்குக் கூறியவாறே நானும் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.” என்று சூதமாமுனிவர் கூற ஆரம்பித்தார்.

02. முன்னுரை - 2

02. முன்னுரை - 2
சிரார்த்தம்;

ஒவ்வொரு உயிரின் எண்ண உணர்வதிர்வுகள் அந்த ஜீவனை கட்டு படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் நீக்கி அவை விடுபட்டு செல்ல இந்த சிரார்த்தம் வழிவகை செய்கிறது. இதன் விளைவாக உடலை விட்ட உயிரானது எல்லாவகை உணர்வு பிணைப்புகளில் இருந்தும், அதிர்வுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தக்க உலகத்தை சென்றடையும்.


வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை மகாளயபட்சம், மாதப்பிரப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தந்தை இறந்த பிறகே தர்ப்பணம் செய்யும் உரிமை மகனுக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அப்படி செய்யப்படும் தர்ப்பணங்கள் தந்தை வழியில் முன் தோன்றிய முன்னோர்கள் ஆறு பேருக்கும், தாய் வழியில் முன் தோன்றிய ஆறு பேருக்கும் சேர்த்து, மொத்தம் பன்னிரண்டு பேருக்கு செய்யவேண்டும். அதாவது மூன்று தலைமுறைகளுக்கு செய்யவேண்டும்.

காசி, கயா, பத்ரிநாத், இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் பிரம்மகுண்டத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்த கர்மங்களை செய்துவிட்டால் பிறகு வருடந்தோறும் வீட்டில் அவர்கள் இறந்த திதியில் கர்ம காரியங்கள் செய்யவேண்டியதில்லை என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது தவறு. புண்ணிய தளங்களில் செய்வதால் அதிக புண்ணியமும், பலனும் கிடைக்கும். அதனால், தொடர்ந்து வருடா வருடம் தவறாமல் பிதுர் காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.

கருடபுராணத்தை படிக்க துவங்குவதற்கு முன், மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

இப்புராணமானது பகவான், கருடனுக்கு கூறும் கேள்வி – பதில் பாணியில்  அமைந்துள்ளது.

 
இனி, வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருட புராணத்தை பகவானை வணங்கி படிக்க தொடங்குவோம்......

01. முன்னுரை -1

01. முன்னுரை
தினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம். எழுதியவர் வியாசர்.
இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.

அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்!  இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.

வைணவ புராணமான இதில்  மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். இப்புராணத்தில், நரகத்தை நிச்சயிக்கும் பாவங்களைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீளவும் வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போதும், வியாதிகள் வரும்போதும், இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதும் தான் கடவுளின் நினைப்பு நமகெல்லாம் வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை என்பதையும் இப்புராணம் நமக்கு உணர்த்துகிறது.

கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்புராணம் படித்துப் பயப்படுவதற்காக மட்டுமல்ல அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவும் தான்.
 
பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம். தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும். மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன? எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது? என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

கருடபுராணம் - ஆசையின்றி வாழ்வதே வாழ்வாகும்

00. ஆசையின்றி வாழ்வதே வாழ்வாகும்
‘இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது.

இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

 
திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் நாம் அறியாமல் செய்த பாவங்கள்  கரைந்து போகவும், இனி செய்யகூடிய பாவங்களிலிருந்தும் விலகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கடவுள் நமக்கு  மனித ஜென்மத்தை கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மத்தில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும்.

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் குவியலாகி விடும்.

ஒருவன், ஏதோ ஒரு இடத்தில், ஒரு கிரவுண்டு வாங்கிப் போடுகிறான். நாலைந்து வருஷம் கழித்து, வீடு கட்டலாம் என்று அங்கே போய் பார்க்கிறான். இவனுடைய கிரவுண்டில், ஆள் உயரத்துக்கு ஒரு புற்று உண்டாகியிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது? கரையான், ஒவ்வொரு மணலாக, கொஞ்சம் கொஞ்சமாக, இந்தப் புற்றைக் கட்டி விட்டது.

இப்போது, இதை இடிக்க வேண்டுமானால், நாலு ஆள், கடப்பாரை எல்லாம் வேண்டும். இடித்த மண்ணை அப்புறப்படுத்த ஒரு லாரியே வேண்டியிருக்கும். கரையான் சுலபமாக இவ்வளவு பெரிய புற்றை கட்டி விட்டது ஆச்சரியமாக இல்லையா?

இதே போலத் தான் மனிதனும், வாழ்நாளில் சிறுசிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரி... அடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும்.

ஒருவன் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறான் என்றால், "அவனுக்கென்ன, பூர்வஜென்ம புண்ணியம்... இப்போ அனுபவிக்கிறான்...' என்று சொல்கின்றனர் அல்லவா? அந்த பூர்வஜென்ம புண்ணியம், இப்போது அவனுக்கு உதவுகிறது.  பாவம் செய்திருந்தால் அதற்குண்டான வேதனையை அனுபவிக்கிறான். இரண்டையும் நாமே தான் சம்பாதித்துக் கொள்கிறோம்.      

பரலோகத்தில் யம தர்மனிடம் கொண்டு போய் நிறுத்துவர். அங்கே பொய் சொல்ல முடியாது;  சிபாரிசு கடிதம் செல்லுபடியாகாது. இவன் செய்த பாவ, புண்ணியங்கள் தான் முன்னால் வந்து நிற்கும். சேர்த்து வைத்த பணமோ, நகை நட்டோ, கார், பங்களாவோ, மனைவி, மக்களோ யாரும் உதவ முடியாது. அவைகளெல்லாம் இந்த உலகத்தோடு சரி.

அதனால், வாழ்க்கை என்பதில் கடமைகள் என்பதும் உண்டு. தனக்காக, பரலோக சுகத்துக்காக செய்து கொள்ளும் புண்ணியங்களும் உண்டு. வீடு, மனைவி, மக்கள் என்றே எப்போதும் சொல்லிக் கொண்டு உயிரை விட்டால் மனித பிறவியே வீண் தான்.

கூடவே தர்மம், தானம் என்பதிலும் சிரத்தை இருக்க வேண்டும்.   "அடடா... இவ்வளவு சம்பாதித்தோமே... இவ்வளவு சேர்த்து வைத்தோமே... ஒரு தானம் செய்தோமா? ஒரு தர்மம் செய்தோமா? ஒரு கோவிலுக்குப் போனோமா? ஒரு அதிதிக்கு சாப்பாடு போட்டோமா?' என்று பரிதாபப்பட வேண்டும். அவ்வப்போது எது முடியுமோ அந்த புண்ணியத்தை சேர்த்து விட வேண்டும். இப்படி சேர்த்த புண்ணியம் நம்மை கை தூக்கி விடும்; காப்பாற்றும்.

இப்படி சேர்த்த புண்ணியத்தில் மனைவியோ, மக்களோ, பந்துக்களோ, நண்பர்களோ பங்கு கேட்க முடியாது; யாராலும் அபகரிக்க முடியாது. அவனவன் சம்பாதித்த புண்ணியம் அவனுக்குத் தான். அது மட்டுமல்ல... அவன் செய்த புண்ணியத்தின் பலனை அவனது சந்ததியினர் அனுபவிக்க முடியும். "தாத்தா செய்த புண்ணியம், அப்பா செய்த புண்ணியம் ஏதோ சவுக்கியமாக இருக்கிறேன்...' என்று பேரனும், பிள்ளையும் சொல்வர்.

அதனால், ஏதாவது புண்ணிய காரியம் செய்து, புண்ணியத்தைச் சேர்த்து வைக்க வேண்டாமா? இது தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும். அப்போது தான் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரும் சவுக்கியமாக இருக்க முடியும். "ஏமாந்து விடாதே தர்மம் செய், புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொள்...' என்றனர்.  யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

Thursday, March 30, 2017

Monday, March 20, 2017

வாழை இலையின் மகத்துவம்!

 

 
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

Thursday, March 16, 2017

2.4 தஞ்சைப் பெரிய கோயிலில் கலை நுட்பம்

2.4 தஞ்சைப் பெரிய கோயிலில் கலை நுட்பம்

தஞ்சைப் பெரிய கோயில் விமானம் கட்டுவதற்குச் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது; அவ்வாறே முதற்கோபுர வாயிலாகிய கேரளாந்தகன் வாயில் கட்டுவதற்கும் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
 
2.4.1 கேரளாந்தகன் வாயில்
 
இந்தத் திருவாயில் 5 நிலைகளைக் கொண்டது; 96லு அடி நீளம், 50லு அடி அகலமுடைய அடிப்பீடத்தின் மேல் 113 அடி உயரம் கொண்டது. இது பற்றி நன்கு ஆராய்ந்த கட்டடக் கலை வல்லுநர் சு.இராசேந்திரன், மருத்துவர் கு.பாலகுமார வேலுவுடன் இணைந்து எழுதுகையில், “முதல் இரண்டு நிலைகள் கருங்கற் கட்டுமானமாகவும், அதன் மேலுள்ள மூன்று நிலைகள் செங்கற் கட்டுமானமாகவும் உள்ளன. முதல் இரண்டு நிலைகளின் சுவர்கள் முழுவதும் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் (Floors) செங்கற் கட்டுமானமாய்த் தான் உள்ளன” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ; மேலும், “கருங்கற்களைப் பொறுத்தவரையில் ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையே சுண்ணாம்பு போன்ற எந்த ஒரு பிணைப்புச் சாந்தும் (Mortor) கிடையாது. கருங்கற்கள் சதுர அல்லது செவ்வக அமைப்பிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், கிடைக்கும் வடிவங்களை மட்டம் சுத்தம் செய்து அப்படியே கட்டுமானத்தில் பயன்படுத்தியிருப்பது சிறந்த திறமையாகும். இதனால் கட்டுமானத்தின் கற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து (Strong staggered support) அந்தச் சுவரின் தாங்கு திறனைக் கூட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
 
அவ்விருவருமே, கேரளாந்தகன் வாயில் நிலைக்கால்களையும் செங்கல் தளத்தையும் பற்றி ஆராய்ந்து, “38’ x 4’ x 4’ அளவில் இரண்டு பெரிய நிலைக்கால்களும், அதற்கு மலோக விட்டமும் இணைப்பு இல்லாமல் ஒவ்வொரு கல்லாலேயே அமைத்திருப்பது மகத்தான சாதனையாகும். மேலும், நிலைக் கால்களின் பக்கவாட்டில் காடி (Grooves) வெட்டி அதனைச் சுவர்க்கட்டுமானத்தோடு இணைத்திருப்பது நுட்பமிகு கட்டிடக் கலைத் திறனாகும்.
 
2.4.2 தொழில் நுட்பத் தளங்கள்
 
முதல் மற்றும் இரண்டாம் நிலைகளின் சுவர்கள் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் செங்கற்களாலேயே அமைந்துள்ளன. கருங்கற் சுவரில், தளத்திற்குக் கீழாகப் பிதுக்கம் (Corrice) கொண்ட ஒரு படை அமைத்து அதற்கு மலோக மரத்தாலான உத்திரங்களைச் (Rafters) சுவரில் அமைத்துள்ள துளைகளில் சொருகி, அதன்மேல் இரண்டு அடுக்காகச் செங்கற்களைச் சுண்ணாம்புக் காறையால் இணைத்துத் தளத்தினை உருவாக்கியுள்ளார்கள். இவ்வமைப்பில் உருவாக்கப்படும் தளங்களைத் தற்காலப் பொறியியல் துறையினர் மதராஸ்தளம் (Madras Terrace) எனக் குறிப்பிடுவர்....... இதே அமைப்பில் 5 நிலைகளின் தளங்களும் கட்டப்பட்டுள்ளன”, என்றும் கூறி அக்காலப் பொறியியல் தொழில் நுட்பத் திறனைப் புலப்படுத்தியுள்ளனர்.
 
ஒரு தளத்திலிருந்து மேலுள்ள தளத்திற்குச் செல்லும் படிக் கட்டுகளிலும்     சிறந்த     பொறியியல்     நுட்பங் கையாளப்பட்டிருத்தலால் படியேறுபவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை.
 
தரமான சுண்ணாம்புக் காரையும் தேவைப்பட்ட இடத்தில் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளது; 1000 ஆண்டுகளாகியும் செங்கற் கட்டுமானம் சிதையாமலிருப்பது பொறியியல் நுட்பத்தைப் புலப்படுத்தும்.
 
தொகுப்புரை
தமிழர்கள் தாங்கள் இறைநினைப்புடன் கட்டிய ஆலயங்களில் எந்த அளவுக்குக் கட்டடக் கலை நுட்பங்களை இயைபுடன் கையாண்டுள்ளனர் என்பது ஆலயங்கள் பலவற்றை ஆய்வு நோக்கில் கண்டு சிந்திப்பதால் தெளிவாகும். எந்த ஆலயத்தை எந்த இடத்தில் கட்டலாம் என்பதற்குப் பூமிப்பரீட்சைத் தேவையாகும்.
 
ஆலயத்தில் அடிப்படையான அங்கங்களாகச் சுவர், மண்டபங்கள், கூரை, கிரீவம், கலசம் - தூபி, ஆகியவை விளக்கப்படுகின்றன. பலவகை ஆலய அமைப்புகளும் சிந்திகப்பட்டன.
 
திட்டம் வகுத்துக் கொண்ட நிலையில் கால்கோள் செய்தலும் கருப்பநியாசமும் ஆகம நோக்கில் விளக்கப் பெற்றுள்ளன. அதிட்டானம், அதன் தொடர்பான உறுப்புகள் பற்றியும் தெளிவாக்கப்பட்டுள்ளது; அதற்கு அடிப்படையான உபபீடமும் விளக்கப்பட்டது.
 
பல கோணங்களில் கட்டடக் கலை நுட்பங்களைத் தெரிந்து கொள்வதால் பயன்மிகப் பெறலாம் என்ற நோக்கில் சில தெளிவுகள் கூறப்பட்டுள்ளன.
 
கோபுரம் பற்றிய விளக்கமும், கோபுரத்தின் அங்கங்களும் தக்கவாறு கூறப்பட்டுள்ளன. கோபுர வாயில் வளர்நிலைகள் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
 
தஞ்சைப் பெரிய கோயில் - கேரளாந்தகன் வாயிலில் கையாளப்பட்ட     பொறியியல் மதிநுட்பம்     நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.
 
நன்றி

Thursday, March 9, 2017

2.3 கோபுரம்

2.3 கோபுரம்
திருவருட் சக்தி நிரம்பிய மூலவர் கருவறையில் நிறுவப்பட்ட நிலையில், அதன் மீது எழுப்பப்பட்ட கூம்பு வடிவக் கட்டட அமைப்பினையே விமானம் என்பர். சுவாமி சன்னிதி விமானம் இவ்வாறிருக்க, ஆலய வாயிலில் விமானம் போன்று கட்டப்படுவதே கோபுரம் ஆகும்.

தெய்வ நல ஆற்றலை ஈர்த்துப் பரப்புவதற்கு உதவியாகக் கோபுரம் அமைக்கப்பட்டது ; எனினும் கலைக் கண் நோக்கில், கம்பீரத் தோற்றத்திற்காகக் கோபுரத்தில் ஒன்றோ பலவோ அடுக்குகள் அல்லது நிலைகள் அமைக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே தமிழகத்தில் உள்ள திருவரங்கத் தெற்குக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டு மிக உயராமாக அமைந்து ஈடு இணையற்று விளங்குகிறது.

அறிவியல் அணுகுமுறைப்படி, ஆலயக் கட்டடப் பொறியியல் அடிப்படையில் நிலமட்டத்தினின்று நன்குயர்ந்த மதில்களுக்கு இடையே துவாரம் (காலியிடம்) என்ற பெயர் கொண்டது வாயில். அந்த வாயிலின் மீது கனசதுர அமைப்பில் செங்குத்தாகக் கோபுரத்தை உயர்த்திக் கட்ட முடியாது ; அப்படிக் கட்டினால் அஸ்திவாரத்துக்குத் தீங்கு ஏற்படும். எனவே, கோபுரம் கட்டுகையில் கோபுர வாயில் வரையில் செங்குத்தாக அமைத்துக் கொண்டு, அதன் மேல் அமைத்திடும் கட்டடம் மேல் நோக்கிக் கூம்பிச் செல்வதாக (Tapering) அமைப்பதே நல்ல ஏற்பாடாகும்.

2.3.1 சிற்பநூல் முறைப்படி கோபுரங்கள
பொதுவாகக் கோபுரம் கீழ்ப்பகுதியென்றும், மேற்பகுதியென்றும் இருபகுதிகளாகக் கொள்வர். கீழ்ப்பகுதி உபபீடம், அதிட்டானம், சுவர் (பித்தி), கூரைக்கான தொடக்கம் என்ற அங்கங்களையும், மேற்பகுதி கர்ணகூடு, கூரை, கண்டம், சிகரம், கலசம் ஆகிய பகுதிகளையும் கொண்டு விளங்கும். பெரும்பாலும் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கல்லும் சுதையும் கொண்டும் கட்டப்படும். சில இடங்கள் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன.

கோபுரத்தின் மேற்பகுதி ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் கோடியில் இடம்பெறும் சதுர அமைப்புடைய அங்கமும், மையப்பகுதியில் செவ்வகமாக வண்டிக் கூண்டைப் போல் ஓர் அங்கமும் இடம்பெறும். கோடியில் இடம்பெறும் அமைப்பினைக் கர்ணக் கூடு என்பர்; மையப்பகுதியில் இடம்பெறும் அமைப்பினை முக சாலை என்றும் கூறுவர். இவ்விரண்டிற்கும் இடையிலே பஞ்சரம், கூடு போன்ற அலங்கார அணிகளை முன்பின் அமைத்துக் கோபுரத் தோற்றத்திற்கு எழில் கூட்டுவர். இதே போன்ற அலங்காரத்தை எல்லா அடுக்கு நிலைகளிலும் இடம் பெறச் செய்து பூமாலை போன்று சுற்றிச் சுற்றி அமைப்பர். கோபுரச் சிறப்பிற்காக, அந்த அந்தத் திசைக்குரிய தெய்வ வடிவங்களையும் கோபுரம் தாங்கிகளையும், தேவர்களையும் புராணத் தொடர்புடன் சுதையினால் வடிவமைத்துக் கட்டுவர்.

2.3.2 கோபுரம் அமைப்பதன் நோக்கம்
சைவ சித்தாந்த அணுகுமுறைப்படி, கோயிலில் அமைக்கப்படும் விமானமும் கோபுரமும் தூலலிங்கம் எனும் நோக்கில் வழிபடப்பெறும் சிறப்பினையுடையவை.

கோயிலுக்குள் சென்று முறைப்படி வழிபட இயலாதவர்களும் கூடக் கோயிற் கோபுரத்தைக் காண்கையில், தம்மை அறியாமலேயே கைகூப்பித் தொழும் வழக்கம் பலரிடம் உண்டு. இதன் நோக்கம் தத்துவச் சிறப்புடையது.
கோயிற் கருவறையில் சுவாமியை வழிபடுங்காலத்தில் இறைவனது பெருமையையும், மனிதன் தன் சிறுமையையும் உணர்ந்து அடக்கவுணர்வை வளர்த்துக் கொள்ள வாய்ப்பேற்படும்.

கோயிற் கோபுர வாயில் உயர்ந்தும் அகன்றும் காணப்படும். கருவறையை நோக்கிச் செல்லுங்கால், இடைப்பட்ட எந்தக் கட்டட அமைப்பும், கோபுர வாயிலைவிடக் குறுகலாகவே அமைந்திருக்கும்; கருவறை ஏனையவற்றைவிடக் குறுகலாக அமைந்திருப்பது ஆலய மரபு. இதனால், குவிதல் என்பது மறைமுகமாக ஆலயம் உணர்த்தும் பாடமாக அமைகிறது. தாயுமானவர் வாக்கில் கூற வேண்டுமெனில், மனம் குவிய ஒரு தந்திரம் ஆலயத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையாகிறது.

உயர்ந்த கோபுர வாயிலில் உள்ளே நிறுத்தப்பட்ட பக்கக் கால்களில் நடனச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைச் சில தளங்களில் காணலாம். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் கோயிற்கோபுர வாயிலில் நடனச் சிற்பங்களைக் காணலாம்.

இராச     கோபுரங்கள் தொடர்பான கட்டடக் கலை நுண்குறிப்புகளை ஆராய்ச்சி நோக்கிலும் ஆகம நோக்கிலும் சிந்திப்போம்.

கோபுர வாயிலைப் பொறுத்தவரையில், ஆலய மூலவர் எந்தத் திசையை நோக்கி அமைந்திருக்கிறாரோ அந்தத் திசையில் கோபுரம் கட்டப்பட வேண்டுவது ஆகம மரபாகும்.

பொதுவாக வீட்டிற்குள் நுழைய எப்படி வாசற்படி நேரே உதவியாக     இருக்கிறதோ அப்படியே ஆலயத்திற்கும் ராசகோபுரம் வாசல் போன்று உதவியாக இருப்பதே முறை. கோபுரத்திற்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பதற்காகவே, ஆலய விமானத்திற்குக் குடமுழுக்கின்போது ஆராதனை புரியும்போது கோபுரத்துக்கும் ஆராதனை புரிவதாகும்.

முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து ஆலயக் கட்டடக் கலை புதிய உத்திகளுடன் புத்துயிர் பெற்றுச் சிறந்த வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது.

கோபுரத்தையும் ஆலய மதிலையும் இணைத்துக் காண்பதால் ஆலயப் பெருமை தெரியும். எடுத்துக்காட்டாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலில் முதன்மையான நுழைவாயில் கீழைத் திருக்கோபுரமாகும்; இதுவே பெரிய திருக்கோபுரமும் ஆகும். 110 x 60 அடி அடித்தளமும், 120 அடி உயரமும் கொண்ட நெடிதுயர்ந்த கோபுரச்     சிறப்பே மதிலால் அமைகின்றது. தெற்கு வடக்கில் 666 அடி, கிழக்கு மேற்கில் 846 அடி, உயரம் 30 அடி கொண்ட திருமதிலைப் பெற்றுப் பரந்த நிலப்பரப்பிற்குப் பாதுகாவலாக உள்ளது. கோபுரமும் மதிலும் இரட்டைப்     பாதுகாப்பினை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்குகின்றன.

2.3.3 கோபுரம் - வாயில்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
(திருமந்திரம், 1792)
எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க வாய் எனும் சத்தியமே கோயிலின் திருவாயிலாக அமையவேண்டுமென்பது கருத்து. எனினும், கோபுரமே இல்லாத கோயிலில் மதிலையொட்டிப் பெரிய வாயில் அமைந்திருக்கும்; அதனை மொட்டைக்கோபுரம் என்பர்.

பொதுவாகக் கோயிலுக்குத் தெய்வநலக் காவல் பொறுப்பில் பைரவர் போன்ற தெய்வங்கள் இருக்கும் என்பது சமய நம்பிக்கை. கோபுரக் கதவுகளேயன்றி, உட்புறக் கோயிற் கதவுகளிலே ஒலிக்கும் மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய கதவுகளைத் திறக்கும் வேளையில் மணியோசை கேட்கும். அந்நிலையில் கோயிலுக்கென அமைந்த பாதுகாப்புத் தேவதைகள் தம் கடமைகளில் ஈடுபடும் என்ற சமய நம்பிக்கை உள்ளது. எனினும், கோபுர வாயிற் கதவையோ கோயிலின் உட்கதவையோ கோட்டைவாசற் கதவைப் போன்று வலிமை மிக்கதாக அமைத்து வருகின்றனர்.

2.2 ஆலய அமைப்பு சாத்திர முறை - தத்துவம்

2.2 ஆலய அமைப்பு - சாத்திர முறை - தத்துவம்
ஓர் ஊரில் ஆலயம் கட்டி அது நீடித்து அருள் விளக்கமாகவும், கலைக் கருவூலமாகவும் அமைந்திட, ஆகம விதிகளைத் தொடக்கத்திலிருந்து பின்பற்றுவது நல்லது. சிற்பநூல் முறைப்படி ஆலயம் கட்டத் தொடங்கினால் வாஸ்து நன்கு அமைந்திடும்.

2.2.1 அமைப்பு
சில தெய்வங்களைத் தவிரப் பெரும்பாலும் அருள்மிகு பெருந்தெய்வங்களுக்கு ஆலயத்தை ஊரின் நடுப்பாகமாகிய பிரம்ம பாகத்தில் அமைத்தல் வேண்டும். இத்தகைய ஆலயம் 2 முதல் 5 வரை சுற்றுப் பிராகாரங்களுடனும் நான்கு கோபுர வாயில்களுடனும், நடுவில் விமானங்களுடனும் அமைத்தல் வேண்டுமெனச் சைவ ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.

நிலத்தை முறைப்படி சோதனை செய்து சல்யோத்தாரம் செய்வது நல்லது. பூமியை 25 அடி ஆழம் வெட்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, ஓடு, கல், மயிர், எலும்பு முதலிய பொருள்களை நீக்கித் தூய்மையான மணலால் நிரப்பி அழுத்திவிட வேண்டும். மலைக்கோயில் கட்டுவதெனின் வேறுவகை அணுகுமுறையைப் பின்பற்றுவர்.

2.2.2 சாத்திர முறை
கட்டடம் கட்ட நிர்ணயித்த இடத்தில் இட்டிகைத் தாபனம், அஃதாவது நான்கு செங்கற்களைத் தேர்ந்தெடுத்துப் பூசை செய்து, ஒமம் வளர்த்துத் தெய்வ நலச் சிந்தனையுடன் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். பிறகு கருப்பநியாசம் தேவையாகும்.

கருப்பநியாசம்
திருக்கோயிலில் மூல மூர்த்தியை நிறுவக்கூடிய இடத்திலும், கோபுரங்களில் கால்கள் நிறுத்துமிடத்திலும், சபைகள் திருமடங்கள் என இருப்பின் அவற்றின் ஈசான்ய பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும், விமானங்களில் ஸ்தூபியின் அடிப்பாகத்திலும் கருப்பநியாசம் புரிதல் வேண்டும்.

உபபீடம் அமைத்தல்
கருவறையில் அதிட்டானம் அமைப்பதற்கு வசதியாக உபபீடம் அமைத்தல் தேவைப்படும்.

குறிப்பிட்ட இடத்தில் திருக்கோயிலின் பிராசாதம் 24 அங்குலம் என்ற அளவையினால் 20-30-50 அளவுள்ள அகல நீளமுள்ளது உத்தம பிராசாதம்; அதே அளவையினால் 10-12-16 அளவுள்ளது மத்திம பிராசாதம்; அதே அளவையினால் 7-8-9 அளவுள்ளது அதமப் பிராசாதம் ஆகும். சரியான அளவுடன் அப்படி நிர்ணயம் செய்த பிராசாதத்தின் அடிப்பரப்பை 25 பாகம் செய்து 9 பங்கில் கருப்ப கிருகமும், 16 பங்கினைச் சுற்றுச் சுவரைக் கனமாக அமைக்கப் பயன்படுத்துதல் வேண்டும்.

லிங்கத்தின் அளவைக் கொண்டு பிராசாதம் அமைக்குங்கால் மகாலிங்கத்தின் சுற்றளவு 3 கொண்டது பீடமாகும். அந்தப் பீடத்தின் அளவு 3 பங்கு கொண்டது கருப்ப கிருக அகலமாகும். கருப்ப கிருக அளவில் மூன்றில் ஒரு பங்கு சுற்றுச் சுவராகும். அப்படி நிர்ணயம் செய்த பிராசாத கருப்ப கிருக அளவை 8 பாகம் செய்து, ஒரு பங்கு சேர்த்துக் கொண்டு உபபீடம் அமைக்க வேண்டும். உபபீடத்தின் உயரமும் அகலத்தின் எட்டில் ஒரு பாகமாக இருத்தல் வேண்டும். இந்த உபபீடம் ஸ்ரீகரம், லலிதம், பத்ரம் என மூன்று வகைப்படும்.

அதிட்டானம் அல்லது பிராசாதம்
ஆலயத்தில் பெருஞ் சிறப்பினைக் கொள்ளும் பாகம் கருவறையாகும். அந்தக் கருவறைக்கு அதிட்டானமே தோற்றப் பொலிவைத் தர அடிப்படையாக விளங்குவது.
உபபீடத்தின் மேலே அதிட்டானம் அமையும்; அது விமானத்தின் கீழ்ப்பக்கம் வியாளம் என்ற வர்க்கம் வரையுள்ளது.

2.2.3 தத்துவ நோக்கு
உலக வரலாற்றை நோக்கும்போது கிரேக்கர்கள் கோயிற் பண்பாடு என்பதனை வளர்த்துப் பெருமை கொண்டனர்; அவர்களைப் போலவே தமிழ்ப் பெருமக்கள் கோயிற் பண்பாட்டை உருவாக்கிக்காட்டிப் பெருமை கொண்டுள்ளனர்.

கோயில் என்றதும் மக்கள் தம் அகத்தே உணர்ந்த - அனுபவித்த - அழகனுபவத்தை ஆகம முறைப்படி புறத்தே புலப்படுத்திய கவின் கலைப்படைப்பு எனலாம். ஆனால், அதற்கு மேலும் சிந்திக்க வேண்டிய நுண்குறிப்பு உண்டு; அது அறிவியலுக்கும் அருளியலுக்கும் பொருந்தி வரக்கூடியதே.

மானுடவுடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையால் அமையப் பெற்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படையில் ஒவ்வொரு கோயிலும் (உடம்பையொத்து அமைக்கப்படுவதால்) ஐம்பூதங்களின் கூட்டுறவுப் பரிணாமத்தை ஒருவகையில் புலப்படுத்தும் கலைப்படைப்பாகும்.

ஒவ்வொரு கோயிலின் உறுப்புகளாக அமைந்துள்ள கற்கள் (கட்டடமும் சிற்பமும்) ‘நிலத்தைக் குறிக்கும்; கோயில் தீர்த்தமாகவுள்ள திருக்குளம் கிணறு முதலியவை ‘நீர்’ எனும் பூதத்தைக் குறிக்கும் . அவற்றுடன் (கருப்பூரச்சுடர் உள்ளிட்ட) ஒளி விளக்குகள் ‘தீ’ எனும் பூதமாகும். இங்கு ஒரு நுட்பக்குறிப்பு உண்டு; ஒளிவிளக்கு நம் கண்ணுக்குப் புலப்படினும், சுடரொளியை வழங்கத் துணை நிற்பது ‘காற்று’ எனும் பூதமாகும். ஐம்பூதங்களே மக்களுக்குப் பரம்பொருளை நினைவுபடுத்தும் வகையில் கூட்டுறவு கொண்டு எழும்பியதே கோயில் என்பது தெரியவரும். சுருங்கக் கூறின், எங்கும் நிறைந்த பரம்பொருளை நினைக்கும் முறையில், ஐம்புலப்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் ஆலயத்தின் கோபுரம், விமானம், மண்டபம், தூண், சுவர், தீர்த்தம் என்றெல்லாம் ஆகம அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.
(தொடரும்...)

Sunday, March 5, 2017

கடவுளின் கைகளில் இனத்தின் விடிவு!

கடந்துவந்த பாதைகளோ முட்கள்
நாம் வீணடித்த நாட்களே ஏராளம்
வாழ்வின் பொருள் விளங்க
பிறந்ததன் நோக்கம்மிளிர
நம் பணிகளை உணர்ந்து
கோர்த்த கரங்களுடன்
உலகை வெல்வோம்.!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
சொல்லிவைத்த மூதாதையர்
நம் எண்ணமறிந்தே சொல்லிச்சென்றனர்.
காலத்தின் பிடியிலகப்பட்டு நாம்
காலடித்தடத்தைத் தொலைக்கது – எம்
இனத்தின் விடிவுக்காய் -ஒன்றுபட்டு
உழகை;கும் தருணமிது!

வாடிப்போனமலர் பூக்காதென்பது எவ்வளவு நிஜமோ
அவ்வளவு நிஜம் உயிர்த்தெழாத சமூகம் பிழைக்காதென்பதும்!

கோடிட்டுக்காட்டிவிட்ட தலைவனுண்டு நமக்கு - இன்னும்
தலைவனே கிடைக்காத சமூகங்களுமுண்டு தரணியில்!

பாழ்பட்டுப்போன இனத்தின் கடைசி நாடித்துடிப்பில்கூட
அதிசயங்கள் நிகழ்த்திவிட எம் பரம்பொருளின் கருணை உண்டு!

கடவுள்நம்;பிக்கை மறுப்போர்கூடி செய்திட்ட சதிகள் பொடித்து
சரணாகதியடையும் காலமதும் புலரும் விரைவில்
நம்பிச்சரண் புகுந்தே நானிலத்தோர் வாழ வணங்கிடுவோம்!
                                         -பிரணவன்-
 

வாழ்வை நெறிப்படுத்தும் இந்து சமயம்

இந்து சமயத்திற்கு ‘சனாதன தர்மம்’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும். அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.

தற்போது விஞ்ஞானம் பெற்றுள்ள அபரிதமான, பிரமிக்க வைக்கும் வளர்ச்சி, உலகம் முழுவதும் எல்லா இனத்திலும் கலாச்சார, பண்பாடுகளில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் என்பதன் பொருளை எடுத்துப்பாருங்கள். "விந்தையான ஞானம்" என்று பொருள் கொள்ளலாமல்லவா? அதாவது அது இன்று சரியாக இருக்கும் நாளையே பிழைத்தும் போகும். இன்று சரி என அடித்துக் கூறும் விஞ்ஞானம் சில காலத்தில அதுவே பிழை என்றும் அடித்துக்கூறும். ஆனால் இந்து மதம் கூறும் மெய்ஞானக்கருத்துக்களோ என்றும் “மெய்”யாகவே விளங்கும்.இந்த நிலையில் தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை காப்பற்ற வேண்டிய பொறுப்பும், போற்றி, பேணி வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

அதற்கு இந்து சமயத்தில் உள்ள வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிக்க வைக்க வேண்டியது மிக, மிக அவசியமாகும். இந்து சமய வாழ்க்கை என்பது அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை உள்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கண்ட அனைத்தும் ஒருங்கிணையும் போது அது ஒரு சிறந்த ஆளுமையை வளர்க்கும். இந்து சமயத்தின் இந்த ஒருங்கிணைந்த பயிற்சியைப் பெறும் போது மனிதன் வாழ்க்கையில் சலனம் இல்லாத மேம்பாட்டை எட்ட முடியும். பொதுவாக இறைவனை அடைவதற்கான இறை தரிசனத்தை சரியை. கிரியை. யோகம். ஞானம் ஆகிய நான்கு வழிகள் மூலம் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

ஆனால் உண்மையில் இறைவனை நெருங்குவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வேதங்கள், உபநிஷத்துகள் கற்றவனுக்கு இறைவன் அருள் கிடைக்காமல் போகலாம். வேதபாராயணம் பற்றி ஒரு வரி கூட தெரியாதவனுக்கு இறைவன் காட்சி கொடுக்கலாம். எனவே இறைவழிபாட்டில் வெளிவேஷங்கள் தேவை இல்லை. இயல்பான வழிபாடே போதுமானது. இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது.

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே, ‘அன்பே சிவம், அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும். அதன் பெறுமதியை உணர்ந்துகொள்ள வேண்டடும்.

6. எப்போதும் கலகலப்பாக இன்முகத்துடன் இருக்க வேண்டும். மனம் இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும். இவை இறைவனை எளிதில் காண உதவும்.

இந்து சமயத்தின் முக்கிய அம்சமே, அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான். அது மட்டுமின்றி எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பாகும்.

இந்து சமயம் மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. அதனால் தான் எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு, ஒருங்கிணைந்த ஒன்றாக, எளிமையானதாக வைத்துள்ளனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தபடி உள்ளது. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஆதி காலத்தில் காதல் புனிதமாக கருதப்பட்டது. அந்த புனிதம் தெய்வங்களின் லீலைகள் மூலம் உணர்த்தப்பட்டது. கிருஷ்ண பரமாத்மா சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தார். முருகப்பெருமான் தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தார்.

அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும் இறைவழிபாட்டில் காணலாம். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல் ஏற்படுகிறது. இறுதியில் சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் அர்த்தநாரீஸ்வர தத்துவமே இதுதான். எந்த நிலையிலும் ஆண் - பெண் சரிநிகர் சமம் என்பதை இந்து மதம் காலம், காலமாக உணர்த்தியபடி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்து ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மையங்களாக உருவாக்கப்பட்டன.

ஆலயங்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வையாகும். தேர் திருவிழா நடக்கும் போது தேரை ஏழை - பணக்காரர், தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் வடம் பிடித்து இழுப்பார்கள்.

‘இறைவன் முன்பு நாம் அனைவரும் சமம்’ என்ற மிகப்பெரிய வாழ்வியல் நெறி அங்கு உணர்த்தப்படுகிறது. மேலும் வாழ்வில் எவ்வளவு துன்பம், துயரம், பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையையும் அடிபணிய வைப்பது ஆலய வழிபாடுதான்.
‘நான் கும்பிடும் கடவுள் என்னை வழிநடத்துவார்’ என்ற அசைக்க முடியாத இரும்பு நம்பிக்கையில் தான் இன்று 99 சதவீதம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த தெய்வ நம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும்தான் மனதில் உள்ள பயத்தை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது. நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.

புராணங்கள், இதிகாசங்கள், நாயன்மார், ஆழ்வார்களின் பாடல்களும் நம்மை நெறிப்படுத்தும் சக்தி படைத்தவை. இவை கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கச் செய்து விடும். கடவுளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தன்மை உண்டாகும். இப்படி நமது வாழ்வியலின் ஒவ்வொரு செயலிலும் இந்து சமய கோட்பாடுகள் இரண்டற கலந்துள்ளது. அந்த கோட்பாடுகளை சரியாக கடைபிடிப்பவர்களே பிறவிச் சூழலில் இருந்து விடுபட முடியும்.

இந்து தர்மத்தால் மட்டுமே பிறப்பு - இறப்பு சூழலில் இருந்து நம்மை விடுவிக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் சில கடமைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

* தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழ வேண்டும். பிரம்ம முகூர்த்தமாகிய 4.3. முதல் 6 மணிக்குள் எழுவது மிகச்சிறப்பு.

* காலையில் நீராடி தூய ஆடை அணிந்ததும் தவறாமல் இறை வழிபாடு செய்ய வேண்டும்.

* காலை, மாலை இரு நேரமும் நெய் விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

* நேரம் இருப்பவர்கள் தமக்கு தெரிந்த உரிய மந்திரங்கள் அல்லது திருமுறைகளை சொல்லி மனம் ஒன்றித்து வழிபடுங்கள்.

* நெற்றியில் திருநீறு, குங்குமம் அணியாமல் இருக்கக் கூடாது.

* தினமும் குறிப்பிட்ட சிறிது நேரமாவது புராண, இதிகாச, தேவார - திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட சமய நூல்களை படிக்க வேண்டும்.

* வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் தியானம் பழக வேண்டும்.

* ஆலயங்களில் நடத்தப்படும் பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமய சொற்பொழிவுகளை சென்று கேட்க வேண்டும்.

* விரத நாட்கள், பண்டிகை தினங்களை பொழுதுபோக்கு நாட்களாகக் கருதாமல் ஐதீகத்தை உணர்ந்து ஆத்மார்த்தமாக கடைபிடிக்க வேண்டும்.

* மாதத்துக்கு ஒரு தடவையாவது வீட்டில் கூட்டுப்பிரார்த்தனை செய்வது அல்லது சிறப்பு வழிபாடுகள் நடத்தலாம்.

* மடாதிபதிகள், துறவிகள், ஞானிகளை சந்தித்து ஆசி பெற வேண்டும். துறவிகள் பார்வை நம் மீது பட்டால் தோஷங்கள் விலகும். அவர்களின் நேர்மறை சக்திகள் நம்மீதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

* தினமும் ஆலயம் செல்ல வேண்டும். முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு தடவையாவது ஆலயத்துக்கு சென்று, நிதானமாக, மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்ய வேண்டும்.

* ஆலயத்துக்கு செல்லும்போது தனியாக செல்லாமல், தமது குடும்பத்துடன் அல்லது மனைவி மற்றும் குழந்தைளை அழைத்து சென்று உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் நம் வாழ்வை மேன்மைப்படுத்தும். இவை தவிர இன்னும் ஏராளமான இந்து தர்ம கோட்பாடுகள் உள்ளன. அவை மூலம் நாம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஞானச் சுரங்கமான நமது இந்து சமய பண்பாட்டில் அள்ள அள்ளக் குறையாத பலன் தரும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

தினமும் ஆலயத்துக்கு சென்றால் நாளடைவில், வழிபாட்டு ரகசியங்கள் உங்களுக்கு புரிந்து விடும். ஆலய வழிபாட்டில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கத் தொடங்கி விடும்.

அந்த விடைகள் உங்களை முழு மனிதனாக்கும். மனிதருள் மாணிக்கமாக நீங்கள் ஒளி வீசுவீர்கள். அந்த நிலையை பயன்படுத்தி பிறவிப் பெருங்கடலில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அதற்காகத்தான் கடவுள் நமக்கு சிந்தித்து செயலாற்றும் தனிப்பெரும் திறனை தந்திருக்கிறான்.

என்றும் அன்புடன்...
பிரணவன்.

2.1 ஆலயங்களின் கட்டடக் கலை நுட்பங்கள்

2.1 ஆலயங்களின் கட்டடக் கலை நுட்பங்கள்
ஆலயம் என்பது மக்களின் நலத்துக்கான அறிவியல் சார்ந்த தெய்வ நலச் சின்னம். தாம் இன்புறுவதுபோல உலகமும் இன்புறவேண்டுமென்ற நோக்கில் நம் முன்னோர்கள், இயற்கைச் சூழலுடன் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பலவகையான ஆலயங்களைக் கட்டினர். பல்லவர்கள் காலத்திலிருந்து கற்கோயில்கள், சிறப்பாகக் கட்டுமானக் கோயில்கள் வளர்ச்சி பெற்று வந்துள்ள சிறப்பினை வரலாறு கூறும். எனவே, கோயில் கட்டும் இலக்கணம் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம்
2.1.1 நிலம் தேர்ந்தெடுத்தல்
கோயில் கட்டுவதற்கு முன், உரிய நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் சமப்படுத்துதல் வேண்டும். அமைக்க விருக்கும் கோயிலின் அளவையொட்டி நிலத்தில் ஒரு சதுரம் வரைவர். அதனைப் பக்கத்திற்கு எட்டாக 64 சதுரங்களாகவோ, பக்கத்திற்கு ஒன்பதாக 81 சதுரங்களாகவோ அமைப்பர். இவற்றில் நடுவிலுள்ள சதுரங்களில் கருவறை விமானத்தையும், ஒரங்களிலுள்ள சதுரங்களில் பிராகாரம், பரிவாரக் கோயில்கள் முதலியவற்றை அமைத்திடுவர். இடைப்பட்ட சதுரங்களை மர்மத் தானங்கள் எனக் கொண்டு வெளியாக விட்டுவிடுவர்.
2.1.2 ஆலயத்தின் ஆதார அங்கங்கள்
ஆலயம் எழுப்புகையில், 1. அதிட்டானம் (அடிநிலை), 2. சுவர் (கால்), 3. பிரஸ்தரம் (கூரை), 4. கழுத்து (கிரீவம்), 5. சிகரம் (தலை), 6. குடம் (ஸ்தூபி), என ஆறு பகுதிகளாகக் கொண்டு, ஒவ்வொன்றிலும் சிற்பிகள் தம் திறமையை நுண்கலைக் கூறுகள் வாயிலாக வெளிப்படுத்துவர்.

இவ் ஆறு அம்சங்களையும் தேடிப்பார்த்போது எனக்கு தோன்றிய ஒரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 
ஆததான் மூலாதார சக்கரங்கள் ஆறு. மூலாதார சக்கரங்களையும் மனித உடலுடன் தொடர்புபடுத்தி ஆறாக வகுப்பர்.  ஏழாவதாக உள்ள சக்கரமானது மனிதனின் தலை உச்சியின் மேல் காணப்படுவது. இவற்றை இணைத்துள்ள படத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.



அதிட்டானம், ஆலயத்தைப் பொறுத்தும் ஆலயங்கட்டும் பொருள் திட்டத்தைப் பொறுத்தும், அதிட்டான உறுப்புகளாக, உபானம், ஜகதி, குமுதம், பத்மம், அந்தரி, வாஜனம், பட்டிகை முதலிய பல பகுதிகளை அமைப்பர்.
அதிட்டானத்தில் பலவகைகள் உண்டு. 1. பாதபந்த அதிட்டானம், 2. கபோதபந்த அதிட்டானம், 3. பாதபந்த கபோத பந்த அதிட்டானம் (அல்லது) வர்க்க பேத அதிட்டானம், 4. பிரதி பந்த அதிட்டானம்
முதலியவற்றை அமைப்பர். எனினும் சிறப்பாகப் பாதபந்த அதிட்டானம் (பாதக்கட்டு) என்றும், பத்மபந்த அதிட்டானம் (தாமரைக்கட்டு) என்றும் அமைந்திடும் இருவகைகளே சிறப்பாகக் கொள்வர்.
அதிட்டானத்தின் கீழே, சில கோயில்களில் உபபீடம் எனும் பகுதியையும் அமைப்பது உண்டு. தஞ்சைப் பெரிய கோயில், கங்கை, கொண்ட சோழீச்சரம் ஆகிய கோயில்களில் இவ்வமைப்பைக் காணலாம். அதிட்டானமே தன் மேலுள்ள கட்டடம் முழுவதையும் தாங்கி நிற்பதால் அதற்கெனத் தனிச் சிறப்பு உண்டு ; அதனைத் தாங்குதளம் எனலாம்.
சுவர் (கால்)
அதிட்டானத்தின் மேலுள்ள கட்டடப் பகுதியைச் சுவர் அல்லது கால் என்பர். அந்தச் சுவருக்கு அழகு சேர்க்க ஆங்காங்கே அத் தூண்களும், கோட்டங்களும், மகரதோரணங்கள் முதலியவையும் அமைக்கப்படும். சிறப்புக் குறிப்பாக மயிலை சீனி, வேங்கடசாமி எழுதுகையில், “கருவறைச் சுவரின் வெளிப்புறத்திலும்,     அர்த்த     மண்டபச்     சுவரின் (இடைநாழிகையின்) வெளிப்புறத்திலும் கோஷ்டபஞ்சரம், கும்பபஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும், கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்தமண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றாக இரண்டு கோஷ்ட பஞ்சரங்களும் ஆக     ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும்” (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக்.39) எனக் கூறியுள்ளார்.
பிரஸ்தரம் (கூரை)
கருவறை போன்ற இடங்களில் சுவரின் மேல் அமைக்கும் கூரையினைப் பிரஸ்தரம் என்பர். இதனில் பூதவரி, கொடுங்கை, யாளிவரி என மூன்று பகுதிகள் உண்டு. இதன் மேல் ஒன்று, இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் அமைப்பது உண்டு.
கிரீவம் (கழுத்து)
கருவறை மேலே அமைக்கப்படும் தலையின் அமைப்பை ஒட்டிக் கழுத்து சதுரமாகவோ, எண்பட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது தூங்கானை வடிவிலோ காணப்படும் உறுப்பு.
குடம் (கலசம் - ஸ்தூபி)
சிகரத்தின் மேல் குவிந்த தாமரை போல் உள்ள பகுதியைக் கலசம் அல்லது ஸ்தூபி என்பர். இந்தக் கலசம் சுதையாலோ கருங்கல்லாலோ செம்பினாலோ பொன்னாலோ பொன்முலாம் பூசப்பட்ட செம்பாலோ செய்யப்பட்டிருக்கும்.
(தொடரும்..)

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...